வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!
வீர தீர சூரன் திரைப்படம் தூள் போன்ற ஒரு படம் மாதிரி இருக்கும் என கூறி எஸ்.ஜே.சூர்யா படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர் விக்ரம் வீரதீரசூரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை சித்தா எனும் தரமான படத்தை இயக்கிய இயக்குநர் அருண் குமார் இயக்குகிறார் என்பதாலும், படத்தில் விக்ரம் ஆரம்ப காலத்தை போல கிராமத்தில் வசிக்கும் மனிதர் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ள காரணத்தால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இந்த திரைப்படம் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனவே, படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் பேட்டியில் கலந்துகொண்டபோது படம் எந்த மாதிரி இருக்கும் என்பது பற்றி பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” வீரதீரசூரன் திரைப்படம் அருள், தூள் போன்ற படங்கள் எப்படி விக்ரம் சாருக்கு இருந்ததோ அதைப்போலவே இருக்கும். அந்த படங்கள் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும். இந்த திரைப்படம் கிளாசிக் கமர்ஷியல் படமாக இருக்கும்.
விக்ரம் சார் பொறுத்தவரை எல்லா படங்களிலும் தன்னுடைய நடிப்பில் ஒரு மேஜிக் செய்வார். அதைப்போலவே, இந்த படத்திலும் தன்னுடைய நடிப்பில் மேஜிக் செய்திருக்கிறார். படத்தில் அவருடன் நடிக்கும்போது அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்துபோய்விட்டேன். நீங்கள் படம் பாருங்கள் நீங்களும் வியந்துவிடுவீர்கள்” எனவும் எஸ்.ஜே.சூர்யா கூறி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.