‘முதல் ஆளாய் பாராட்டும் ஆன்மா’! சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன மாரி செல்வராஜ்!

சென்னை : வாழை படத்தினை கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என சிவகார்த்திகேயன் பாராட்டி பேசிய நிலையில், மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
வாழை படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி பேசி வரும் நிலையில், படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் படம் பற்றி பேசி மாரிசெல்வராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பேசும்போது ” நம்மளுடைய நெருக்கமானவர்களுடைய கதையை கேட்கும்போது ஒரு ஆர்வம் எமோஷனலாக இருக்கும். அப்படி தான் வாழை படத்தில் மாரி செல்வராஜ் அவருடைய கதையை சொல்லியிருக்கிறார்” என சிவகார்த்திகேயன் கூறினார்.
படத்தின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருந்தது எனவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டு பாராட்டி பேசினார். “படத்தில் வரும் காட்சிகள் படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை பார்க்கும்போது நம்மளுடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. படத்தில் நடித்த இரண்டு பசங்கள் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள்” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன் “மாரி செல்வராஜ் தன்னுடைய கதையை மட்டும் படத்தில் சொல்லவில்லை, அவர் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை படத்தில் நிரூபித்துள்ளார்” எனவும் பாராட்டினார். இந்த மாதிரி நல்ல படத்தை கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பது முக்கியமான ஒன்று. கண்டிப்பாக சென்று பாருங்கள்” எனவும் சிவகார்த்திகேயன் கூறினார்.
சிவகார்த்திகேயன் தனக்கு வாழ்த்து தெரிவித்ததை தொடர்ந்து மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள் …கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன். சகோதரர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025