திரைப்பிரபலங்கள்

அந்த படத்தை பண்ணிகொடுத்தே ஆகணும்! கமல்ஹாசனுக்கு கட்டளை போட்ட தயாரிப்பாளர்!

Published by
பால முருகன்

நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் எச்,வினோத் இயக்கத்தி உருவாகி வரும் தன்னுடைய 233 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வசூல் ரீதியாக ஹிட் கொடுத்த திரைப்படம் எதுவென்றால், கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் என்று கூறலாம்.

இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு அதிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. படம் வெளியான முதல் நாளில் எப்படி கொண்டாடுவார்களோ அதே அளவிற்கு படத்தை கொண்டாடி தீர்த்தனர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போதிலும் இந்த படத்திற்கு அருமையான வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது என முன்னதாகவே கெளதம் மேனன் கூறியிருந்தார். இந்த நிலையில், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் கதை தயாராக இருப்பதாகவும், இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்தே ஆகவேண்டும் என தான் கூறியதாகவும் படத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மாணிக்கம் நாராயணன் ” வேட்டையாடு விளையாடு படத்தின் 2-வது பாகத்துக்கான கதை ரெடியாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது அந்த இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சார் கலந்து கொண்டிருந்தார் . அந்த இசை வெளியீட்டு விழாவில் படத்திற்கான கதையை சொல்லும்போது படத்தின் பாதி கதை தான் ரெடியாக இருந்தது. ஜெயமோகன் எழுதாமல் இருந்தார் .

எனவே, அதனால் கௌதம் மேனன் படத்தின் கதை பாதி ரெடியாகிவிட்டது என்று கூறினார் . அதற்கு கமல்ஹாசன் சார் ரெடி ஆன பிறகு என்னிடம் சொல்லுங்கள் என்று கூறினார் . பிறகு நான் கமல்சாரை சந்தித்தபோது 2,3 படம் எனக்கு இருக்கிறது. அதனை முடித்துவிட்டு பார்க்கலாம் . என்று என்னிடம் கூறினார் அதற்கு நான் சார் நீங்கள் பெரிய லெஜென் உங்களுக்கு பல படங்களில் நடிக்க கமிட்மெண்ட்ஸ் இருக்கும் ஆனால் நீங்கள் இந்த படத்தை பண்ணி கொடுத்தே ஆக வேண்டும். இது நல்ல படம் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

எங்களுடைய கடைமைக்கு நாங்கள் அவரிடம் தகவலை தெரிவித்துவிட்டோம். இனிமேல் வேட்டையாடு விளையாடு 2 படத்தை செய்வது கமல் சார் கையில் தான் இருக்கிறது. மற்றபடி, படத்தின் கதை ரெடி, இயக்குனர் ரெடி எல்லாமே ரெடி” எனவும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் கமல் சார் சீக்கிரம் வேட்டையாடு விளையாடு 2 படத்தை செய்யுங்கள் என கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!

சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…

15 minutes ago

விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…

24 minutes ago

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

9 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

9 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

10 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

10 hours ago