“நான் பொது சொத்து அல்ல” புகைப்படக் கலைஞர்கள் பற்றி காட்டமாக பேசிய டாப்ஸி.!
மும்பை : புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் (Paparazzi) புகைப்படக்காரர்களை நடிகை டாப்ஸி கண்டித்துள்ளார்.
பாலிவுட் நடிகை டாப்ஸி பண்ணு பாப்பராசியுடன் (புகைப்படக் கலைஞர்கள்) பல முறை சண்டையிட்டு தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். பாப்பராசிகளுடனான வாக்குவாதத்தால், அவர் பலமுறை ட்ரோலும் செய்யப்பட்டார். தற்பொழுது அதற்கு காட்டமாக பதில் கூறியுள்ளார்.
சமீபத்திய ANI நேர்காணலில் பேசிய டாப்ஸி பன்னு, ” தான் பிரபலமான ஒரு நபர்தானே தவிர, மற்றவர்களின் பயன்பாட்டிற்குறிய பொது சொத்தல்ல என கூறிய அவர், ‘No Means No’ என்பது அனைத்து பெண்களுக்கும் பொருந்துவது போல தொழில்முறை பெண் கலைஞர்களுக்கு நடிகைகளுக்கு பொருந்தும் என்றார்.
நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். நான் ஒரு பொது நபர், பொது சொத்து அல்ல. இந்த இரண்டு விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனக்கு மரியாதை கொடுத்தால் நானும் மரியாதை கொடுப்பேன். நீ என் கிட்ட வந்தா நான் பொறுக்கவே மாட்டேன். நீங்கள் குதித்தால் அல்லது கத்தினால் அல்லது அருகில் வந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது ” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
“I am a public figure, not public property” Taapsee Pannu blasts the paparazzi#ANIPodcast #SmitaPrakash #TaapseePannu #Paparazzi #Bollywood
Watch Full Episode Here: https://t.co/37YkT6m8lh pic.twitter.com/t6PxKdvJYM
— ANI (@ANI) August 23, 2024