படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!
நிஜ வாழ்க்கையில் யாரும் புகைபிடிக்க கூடாது என ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
எனவே, படத்தினை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், சூர்யா, விஜய் தேவர கொண்டா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா ” இந்த நேரத்தில் நான் ரசிகர்களுக்கு ஒரே ஒரு எச்சரிக்கையை வேண்டுகோளாக மட்டும் கொடுக்க விரும்புகிறேன். அது என்னவென்றால், நீங்கள் யாரும் உங்களுடைய வாழ்க்கையில் புகைபிடிக்காதீர்கள். இந்த படத்தில் நான் படத்திற்காக மட்டுமே புகைபிடித்திருக்கிறேன். எனவே, அதனை பார்த்துவிட்டு யாரும் புகைபிடிக்க கூடாது என்பதை நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் புகைபிடிக்க ஆரம்பித்தால், உங்களால் நிறுத்த முடியாது. ‘ஒரு சிகரெட் அல்லது ஒரு சிகரெட்’ என்று சொல்வதன் மூலம் நீங்கள் தொடங்குவீர்கள். ஆனால் நீங்கள் ஆரம்பித்தவுடன், உங்களால் நிறுத்த முடியாது. இந்த விஷயத்தை நான் யார் செய்தாலும் ஆதரிக்கமாட்டேன். நானும் இந்த மாதிரி ஒரு விஷயத்தை என்னுடைய நிஜ வாழ்க்கையில் நான் எப்போதும் செய்யமாட்டேன்” எனவும் சூர்யா தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025