சார் அந்த சீன் நடிச்சுகாட்டுவிங்களா..? சித்தார்த்துக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் ரசிகை.!!
நடிகர் சித்தார்த் தற்போது ‘டக்கர்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக படத்தின் ப்ரோமோஷன்காக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சித்தார்த் பல விஷயங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்தார். அப்போது அந்த பேட்டியில் தொகுப்பாளர் ஒருவர் ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள் என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சித்தார்த் “பாய்ஸ் திரைப்படம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு திரைப்படம். படத்தில் மவுண்ட் ரோடு வரும் சிக்னல் காட்சியில் நடித்ததற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இந்த காட்சி எடுக்கும்போது எனக்கு உண்மையிலே விபத்து நடித்தது.
அந்த காட்சியில் நான் துணி இல்லாமல் சாலையில் இருந்து ஓட வேண்டும். கிட்டத்தட்ட இந்த சீனை மட்டும் 7 நாட்கள் கிட்ட எடுத்தோம். 7 நாட்காளாக நான் துணியே இல்லாமல் அந்த சாலையில் ஓடிகொண்டிருந்தேன். இந்த மாதிரி காட்சியில் நடித்தது நான் சினிமா மீது வைத்திருந்த காதல் மட்டுமே காரணம்.
கடந்த மாதம் பெண் ஒருவர் என்னை பார்த்து “சார் பாய்ஸ் படத்தில் அந்த மவுண்ட் ரோடு காட்சியில் நடித்தது போல நடித்து காமிப்பீர்களா..? என கேட்டார். நான் அந்த பெண்ணிடம் நீ என்னமா நினைத்துக்கொண்டு வந்த..? என்னை என்ன நினைச்சுகிட்டுஇருக்க என கேட்டேன்…” அந்த பெண் என்னிடம் அப்படி கேட்டது ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது” என சித்தார்த் நகைச்சுவையாக கூறியுள்ளார்.