டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!
சிம்ரன் சொன்ன நடிகை இவரா என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஒரு நடிகையின் பெயரை பயன்படுத்தி பேசி வருகிறார்கள்.

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வந்தது என்றால் அதனை தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி தான் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்திலும் சிம்ரன் நடித்து வருகிறார்.
படங்களில் பிஸியாக இருக்கும் சிம்ரனுக்கு சமீபத்தில் தனியார் விருது நிகழ்ச்சி ஒன்றில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது விழாவில் கலந்து கொண்ட சிம்ரன் பேசும்போது நடிகை ஒருவர் பேசிய விஷயங்களை பற்றிய உண்மையையும் உடைத்துவிட்டிருக்கிறார். இப்போது மட்டுமில்லை எப்போதுமே சிம்ரன் தனது மனதிற்கு படும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார்.
அப்படி தான் அந்த விருது விழாவில் பேசிய சிம்ரன் ” நான் சமீபத்தில் எனக்கு நெருக்கமான ஒரு நடிகையிடம் இந்த படத்தில் ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்த நடிகை உங்களைப் போல ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது என பதில் கூறினார். எனக்கு இதனை கேட்டவுடன் என்ன இவர் இப்படி சொல்கிறார் என்று யோசித்தேன். அவரிடம் இருந்து இந்த மாதிரி புரிதல் இல்லாத பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.
நான் 25 வயதிலேயே முக்கியமான ‘ஆன்டி’ கதாபாத்திரத்தமான கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் நடித்திருந்தேன். டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான ’ஆன்டி’ கதாபாத்திரத்தில் நடிக்கலாம்” எனவும் அந்த நடிகை நடித்த கதாபாத்திரம் டப்பா என கூறி நெத்தியடியான ஒரு பதிலை சிம்ரன் கூறினார். இருப்பினும் அந்த நடிகை யார் என்கிற விவரத்தை சிம்ரன் சொல்லவில்லை என்கிற காரணத்தால் யார் அந்த நடிகை எனவும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலர் ஒரு குறிப்பிட்ட நடிகையின் பெயரை சொல்லியும் பேசி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025