உள்ள போகணுமா வேண்டாமா? ரசிகர்கள் கடுப்பான விக்ரம்!
வீர தீர சூரன்’ படம் பார்க்க தியேட்டருக்கு வந்த நடிகர் விக்ரமை பேச விடாமல் ரசிகர்கள் கூச்சலிட்டதால் அதிருப்தியுடன் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் இன்னுமே அதிகமான வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், திரையரங்குகளில் ரசிகர்களின் அதிகப்படியான அன்பு மற்றும் ஆரவாரம் காரணமாக சில இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், திண்டுக்கல்லில் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்கு விக்ரம் வருகை தந்திருந்தார். திரையரங்கில் முறையான ஏற்பாடுகள் இல்லாததால், ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விக்ரம் படத்தைப் பார்க்க வந்திருந்த நிலையில், சூழல் காரணமாக பாதியிலேயே திரும்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்ரம் திரையரங்கிற்கு வந்தவுடன் அவரை பார்க்கவேண்டும் என ரசிகர்கள் அவருடைய காருக்கு முன்னாள் நின்று கூடினார்கள். உடனே விக்ரம் திரையரங்கிற்குள் கூட செல்ல முடியாத அளவுக்கு வெளியேவே காரில் நின்று கொண்டு சற்று வருத்தமான முகத்துடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது நான் உள்ளே வரணுமா? வேண்டாமா? என ரசிகர்களை பார்த்து கேள்வியை எழுப்பினார். உடனே ரசிகர்களும் நீங்க வரணும் என அன்போடு கட்டளை போட்டனர்.
அதன்பிறகு விக்ரம் ” நீங்கள் வழி விட்டால் தானே என்னால் உள்ளே வரமுடியும் வழிவிடுங்கள் என கூறினார். உடனடியாக ஒரு சில ரசிகர்கள் விலகினாலும் கூட ஒரு சிலர் விக்ரமுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கையில் போனை வைத்துக்கொண்டு வழியை விடாமல் இருந்தார்கள். பிறகு பவுன்சர்கள் பாதுகாப்பாக விக்ரமை திரையரங்கிற்குள் அழைத்து சென்றார்கள். இருப்பினும், திரையரங்கில் முறையான ஏற்பாடுகள் இல்லாததால் அதிருப்தியுடன் விக்ரம் திரும்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.