மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்! தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை!
நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியன் கதாபாத்திரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடித்து பார்க்க முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.

சென்னை : சந்தானம் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று தனது ரூட்டை மாற்றி தான் இனிமேல் நடித்த ஹீரோவாகத்தான் நடிப்பேன் என தொடர்ச்சியாக ஹீரோவாக படங்களில் நடிக்க தொடங்கினார்.அப்படி அவர் நடித்த அதில் ஒரு சில படங்கள் மக்கள் ஏற்றுக் கொண்டாலும் அவரிடமிருந்து மக்கள் அதிகமாக எதிர்பார்த்தது காமெடியன் சந்தானம் தான்.
ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாவில் இருக்கும் திரைபிரபலங்கள் கூட மீண்டும் சந்தானம் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு ஹீரோவாகவும் படங்களில் நடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். சமீபத்தில், வெளியான மதகஜராஜா திரைப்படம் உருவாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியும் சந்தானத்தின் காமெடி ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். இதன் காரணமாக, பலரும் மீண்டும் சந்தானம் காமெடியாக படங்களில் நடிக்க வேண்டும் என அதிகமாக கோரிக்கைகளை வைக்க தொடங்கி விட்டார்கள்.
குறிப்பாக விஷால் கூட மதகஜராஜா படத்தின் வெற்றி விழாவில் சந்தானம் வருடத்திற்கு ஒரு இரண்டு படங்கள் காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த சூழலில், சந்தானமும் காமெடியான படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “நான் சந்தானத்திடம் பேசினேன் அவரிடம் உங்களுடைய காமெடி கண்டிப்பாக இன்றைய கால தலைமுறை ரசிகர்களையும் கவரும். எனவே, நீங்கள் ஒரு ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கும் சம்பளம் காமெடியனாக நடித்தாலும் வழங்கப்படும். தயவு செய்து காமெடி படங்களில் நடிங்கள் என்று கூறினேன். அதற்கு வரும் ஒரு இரண்டு படங்கள் மூன்று படங்கள் நீங்கள் சொல்வது போல செய்து பார்க்கலாம் என கூறி உறுதி அளித்துள்ளார்.
காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது விஷால் உடன் ஒரு படமும், மோகன் ரவியுடடன் ஒரு படமும், ஆர்யாவுடன் ஒரு படமும் நடிக்கவிருக்கிறார்” எனவும் தனஞ்ஜெயன் தகவலை தெரிவித்துள்ளார். மேலும், தற்போது சந்தானம் DD Nextlevel என்கிற படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025