“அதை போட்டுட்டு நடிக்கவே மாட்டேன்” அந்த காரணத்துக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை உதறிய சாய் பல்லவி!
அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சாய் பல்லவி தான் என இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா அறிமுகம் ஆனார். இந்த படத்தில் விஜய் தேவரா கொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஷாலினி பாண்டே கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தது நடிகை சாய்பல்லவி தான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த ரகசிய தகவலையும், படத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்த காரணம் பற்றியும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேசியிருக்கிறார். சாய் பல்லவி நடித்திருக்கும் தண்டேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ” நான் முதன் முதலாக இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க வைக்க ஹீரோயின் தேடி அழைத்துக்கொண்டு இருந்தேன்.
எப்போது எனக்கு நெருக்கமான ஒருவர் சாய்பல்லவியிடம் இந்த கதையை சொல்லி கேட்டுப்பாருங்கள் என கூறினார். உடனடியாக நானும் சாய் பல்லவியிடம் இந்த கதையை கூறினேன். கதையை கேட்டிட்டு அவர் ஸ்லீவ்லெஸ் அணிந்து என்னால் நடிக்க முடியாது என கூறி மறுத்துவிட்டார். காலப்போக்கி சில நடிகைகள் வாய்ப்புகள் வரவில்லை என்றால் தன்னுடைய பாணியை மாற்றிக்கொள்வார்கள்.
ஆனால், சாய் பல்லவி இன்னும் மாறாமல் அப்படியே இருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பாராட்டி பேசினார். இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் மேடம் நீங்கள் தான் சிறந்த நடிகை என்பது போல பாராட்டுகளை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், அவர் நடித்துள்ள தண்டேல் படம் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.