முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

sai abhyankkar

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, முதல் பட வாய்ப்பாக அவருக்கு லோகேஷ்  கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்திற்க்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அந்த படத்தில் இருந்து பாடல்கள் கூட வெளியாகவில்லை. ஆனாலும், அவருக்கு அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு சில நாட்கள் கழித்து படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியுள்ளதாகவும், அவருக்கு பதில் சாய் அபியங்கர் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, அவர் இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில், அடுத்ததாக இன்னும் பெரிய வாய்ப்பாக அல்லு அர்ஜுன் படத்திற்க்கு இசையமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்க ஒப்பந்தம் ஆனதாக முதலில் தகவல் வெளியானது.

ஆனால், இப்போது ஆல்பம் இசையை பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் வகையில் சாய் அபியங்கர் கொடுத்து வருவதால் அவருக்கு இந்த பட வாய்ப்பு வழங்கலாம் என படக்குழு முடிவு செய்து அவருக்கு இந்த படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனையடுத்து அவருடைய வளர்ச்சி அசுர வளர்ச்சி என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்