ஓடிடியில் வெளியானது புஷ்பா 2! கூடுதலாக இடம்பெற்ற 24 நிமிட காட்சிகள்!
புஷ்பா 2 திரைப்பறம் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சென்னை : கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படம் வசூல் ரீதியாக இந்திய சினிமாவில் எளிதில் மறந்துவிடமுடியாத சம்பவம் ஒன்றை செய்திருந்தது. 450 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபம் கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையையும் படைத்ததது.
அதன்படி, ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இப்படம் உலகளவில் ரூ.1,799 கோடி வரை வசூலித்துள்ளது. ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் மொத்த வசூலான ரூ. 1,788 கோடியை முறியடித்து, அதிக வசூல் செய்த இரண்டாவது இந்தியப் படமாக ‘புஷ்பா 2’ மாறியுள்ளது. திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தனர்.
இதனையடுத்து, ‘புஷ்பா 2’ திரைப்படம் ஜனவரி 30 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் எனவும், ஓடிடியில் வெளியாகும் வெர்ஷனில் கூடுதலாக 24 நிமிட காட்சிகள் சேர்க்கப்படவுள்ளதாகவும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பின் படி, தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில்கூடுதலாக 24 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. படம் வெளியானதை தொடர்ந்து திரையரங்குகளில் படம் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் படம் பார்த்துவிட்டு சிலர் தங்களுக்கு பிடிக்கவில்லை எனவும் வெளிப்படையாகவே விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.
மேலும், புஷ்பா 2 படம் வசூலில் சாதனை படைத்ததை போல, ஓடிடி விற்பனையிலும் பெரிய சாதனையை படைத்திருத்தது. அது என்னவென்றால், புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமைகள் நெட்ஃபிளிக்ஸ் மூலம் ரூ.275 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இது தான் இந்திய சினிமாவில் ஒரு நிறுவனம் அதிகமாக பணம் கொடுத்து வாங்கிய திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.