தீர்ந்தது சிக்கல்..வீர தீர சூரன் படம் வெளியிட அனுமதி கொடுத்த டெல்லி நீதிமன்றம்!

'வீர தீர சூரன் பாகம்: 2' திரைப்படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VeeraDheeraSooran

சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்திற்கு பிரச்சனை வந்தது. மும்பையை சேர்ந்த B4U எனும் நிறுவனம் திரைப்படத்திற்கு முதலீடு செய்திருந்த நிலையில் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தேதிக்குள் OTT உரிமையை விற்காததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி 50% நஷ்டஈடு தரவேண்டும் என கூறி பட ரிலீசுக்கு தடை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், டெல்லி நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி வரை வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதனால் இன்று படம் ரிலீஸ் ஆகுமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு அடுத்ததாக வந்த அறிவிப்பில்  B4U நிறுவன நஷ்டத்தை குறிப்பிட்டு ரூ.7 கோடி டெபாசிட் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யலாம் என பட தயாரிப்பு நிறுவனத்திற்கு டெல்லி நீதிமன்றம்உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து, இந்த படத்திற்கான தடை உத்தரவு 4 வாரங்கள் வரை நீட்டிக்கபட்டுள்ளதாகவும் உத்தரவு பிறப்பித்திருந்து. இது விக்ரம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் அவர்களுக்கு குட் நியூஸ் கிடைக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ‘வீரதீர சூரன்’ பட வெளியீட்டிற்கு தடை இல்லை என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு நேரில் ஆஜராகி, B4U நிறுவனத்துடன் சமாதான உடன்பாடு ஏற்பட்டதாகவும், இதன்படி, மூன்று நாட்களுக்குள் படத்தின் சாட்டிலைட் உரிமைகளை வழங்குவதற்கும், முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் செலுத்துவதற்கும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, பத்திரம் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இரு தரப்பும் நீதிமன்ற உத்தரவை ஏற்று, மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ‘வீர தீர சூரன் பாகம்: 2’ படம் இன்று மார்ச் 27, 2025 மாலை 6 மணி முதல் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்