“பிரியங்கா தான் சீனியர் ஆங்கர்”! தீப்பொறியை சுண்டிவிட்ட சுஜிதா…வேதனைப்பட்ட மணிமேகலை!!

பிரியங்கா தான் சீனியர் தொகுப்பாளர் என சுஜிதா உயர்த்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

CookwithComali5priyanka

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனை பெரிய அளவில் பேசும்பொருளாகியுள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு தீ பொறி காரணமாக அமைந்தது சுஜிதா தான் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. ஏனென்றால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முறையாக மணிமேகலைக்கு நிகழ்ச்சியை விட்டு வெளியேற எண்ணம் வந்ததற்கு இதுகூட முதல் காரணமாக இருக்கலாம் என ஒரு விஷயம் நடந்துள்ளது.

அது என்னவென்றால், நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் ஒரு எபிசோடில் மணிமேகலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடுவர்கள் மற்றும் குக் ஆக கலந்து கொண்ட பிரபலங்களை சரியாக வரவேற்கவில்லை. அவருக்கு வரவேற்க தெரியவில்லை என நிகழ்ச்சியின் போட்டியாளர் சுஜிதா சூசகமாக பேசி பிரியங்கா தான் சிறந்த தொகுப்பாளர் என உயர்த்தி பேசினார்.

பிரியங்கா தான் சீனியர் ஆங்கர் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருக்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார் என்பதை பாருங்கள் எனவும் கூறி மணிமேகலையை அமைதியாக இருக்க கூறி பிரியங்காவை தொகுத்து வழங்க சொன்னார். உடனே, பிரியங்காவும் தன்னுடைய ஸ்டைலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது போல் நடித்துக்காட்டினார்.

உடனடியாக, நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் மணிமேகலை கையை பிடித்து கீழே இறங்க சொன்னார். பின் செப் தாமுவும் நகைச்சுவையாக, இனிமேல் இந்த நிகழ்ச்சிக்கு ஒரே ஒரு ஆங்கர் என்றால் அது பிரியங்கா தான் என கூறினார். இதனை கேட்ட மணிமேகலை சற்று வேதனையுடன் அந்த முகத்தை மறைத்துக்கொண்டு வெளியே சிரித்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்று, பல சமயங்களில் நடந்த காரணத்தால், என்னவோ மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் தன்னை வேலை செய்யவிடாமல் பிரியங்கா ஆதிக்கம் செலுத்தியதாக பெயரை குறிப்பிடாமல் கூறி, தனக்கு பணம் விட சுயமரியாதை தான் முக்கியம் எனக்கூறி விலகி இருந்தார். இப்படியான பிரச்சனை வருவதற்கும், மணிமேகலை மனதில் வேதனை ஏற்பட்ட முதல் காரணத்திற்கும் சுஜிதா தான் பிரச்னையைத் தூண்டிவிட்ட, காரணம் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen