மீண்டும் மீண்டும் ரஜினியிடம் பாராட்டு! பிரதீப் காட்டில் மழைதான்!
பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார்.

சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் முதல் படமாக வெளியான கோமாளி படம் பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லவ் டுடே படத்தினை அவரே இயக்கி அதில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இந்த படம் வெளியான சமயத்திலே நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு மிகவும் உற்சாகம் அடைந்து பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். அதன்பிறகு இன்னுமே படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்தது.
அந்த படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்துள்ள டிராகன் படமும் பட்டயை கிளப்பி வருகிறது. வெளியான 10 நாட்களில் 100 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தை பார்த்த ரஜினிகாந்த் உடனடியாக படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், தயாரிப்பாளர் என அனைவரையும் தன்னுடைய வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக ரஜினிகாந்திடம் இருந்து பிரதீப் ரங்கநாதன் பாராட்டுகளை வாங்கி வரும் நிலையில், விரைவில் அவருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். முன்னதாகவே லவ் டுடே படத்தை முடித்த பிறகு இப்படியான தகவல் ஒன்று வந்த காரணத்தால் இப்போது இப்படி ஒரு தகவல் வைரலாகி கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025