“கடவுளே அஜித்தே”..தயவுசெஞ்சி கூப்பிடாதீங்க வேதனையா இருக்கு..அஜித் அறிக்கை!
'கடவுளே அஜித்தே' என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது என அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் எப்போதுமே அஜித்திற்கு ஏதாவது செல்லப் பெயர் வைத்து அவரை அன்போடு அழைத்து தங்களுடைய அன்பு வெளிப்படுத்துவது உண்டு. ஆனால் அஜித்திற்கு அதெல்லாம் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது என்றே சொல்லலாம். குறிப்பாக அஜித் சினிமாவில் அறிமுகமாகி தீனா படங்களில் நடித்து கொண்டிருந்த கால கட்டத்தில் தல என்று அவரை பலரும் அழைத்தனர்.
அவர் நடிக்கும் படங்களிலுமே தல 40, தல 50 என்று தான் டைட்டில் கார்டு வரும். எனவே ஒரு கட்டத்திற்கு மேல் தல என்று தன்னை ரசிகர்கள் அழைப்பது அவர்களுடைய அன்பை வெளிப்படுத்துவது எனக்கு புரிகிறது. ஆனால் இனிமேல் என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம். அன்புடன் AK என்று அழைத்தால் போதும் என வேண்டுகோள் வைத்திருந்தார்.
அதனை தொடர்ந்து எங்கு சென்றாலும் தல என்று தானே அழைக்க கூடாது அஜித்தே கடவுளே..அஜித்தே கடவுளே… என அஜித் ரசிகர்கள் கடவுளே கரகோஷமிட்டு வந்தனர். இதனை கவனித்த அஜித் மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அப்படி என்னை கூப்பிட வேண்டாம் அது மிகவும் வேதனையாக இருக்கிறது என வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் சமீப காலமாக, “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க….. அஜித்தே “என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!” என அறிக்கையின் மூலம் அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
From The Desk of AK pic.twitter.com/0W4dspCg26
— Suresh Chandra (@SureshChandraa) December 10, 2024