அடக்கடவுளே! பைக் வாங்கி ரீல்ஸ் செய்த அடுத்த நாளே விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகர்!
பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட விபத்தில் துணை நடிகர் வர்ணமயக் லோகேஷ் பாபு பரிதாபமாக உயிரிழந்தார். வர்ணமயக் லோகேஷ் பாபு கன்னட சினிமாவில் சில படங்களில் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இவர் புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. புதிதாக வாங்கிய பைக்கில் ரீல்ஸ் செய்து தனது சமூக வலைதள பக்கங்களில் சமீபத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அவர் வீடியோ வெளியீட்டு அதற்கு, அடுத்த நாளே அதே பைக்கில் பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த போது துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட விபத்தில் கால்கள் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவருடைய இறப்பு சோகத்தை ஆழ்த்தியுள்ள நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள் சிலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.