தொடர் தோல்விகளில் தவிக்கும் லைக்கா..கை கொடுத்து காப்பாற்றுமா விடாமுயற்சி?
விடாமுயற்சி திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 53 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் பெரிய அளவுக்கு வசூல் செய்து சாதனைகளை படைக்கவேண்டும் என அஜித் ரசிகர்கள் விரும்புவது போல படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஏனென்றால், லைக்கா நிறுவனம் கடைசியாக தயாரித்த எந்த படங்களும் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. குறிப்பாக, பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியடைந்தால் இரண்டாவது பாகம் அதைவிட குறைவாகவே வசூல் செய்து எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்ய தவறிவிட்டது. அதனைத்தொடர்ந்து வெளியான லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் ஆகிய படங்களும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.
இந்த படங்களை தயாரிக்க லைக்கா நிறுவனம் கிட்டத்தட்ட 500 கோடி வரை செலவு செய்தது. ஆனால், எந்த படமும் பெரிய அளவில் லாபத்தை கொடுக்கவில்லை. எனவே, தோல்வியில் துவண்டுபோய் கிடைக்கும் லைக்கா நிறுவனம் விடாமுயற்சி லாபத்தை கொடுக்கும் என தான் காத்திருக்கிறார்கள். விடாமுயற்சி திரைப்படம் கிட்டத்தட்ட 225 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது.
படம் வெளியான முதல் நாளில் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூட மற்றோரு பக்கம் பாசிட்டிவான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது. எனவே, படம் பட்ஜெட்டை தாண்டி வசூல் குவித்து லைக்காவுக்கு ஒரு டீசண்டான வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும்?
விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில்உலகம் முழுவதும் ரூ.53 கோடிகளுக்கு மேல் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல, தமிழ்நாட்டில் மட்டும், முதல் நாளில் சுமார் ரூ.30 கோடி வரை வசூலிக்கலாம் என கணிக்கப்படுகிறது. மேலும், இந்திய அளவில் மட்டும் இப்படம் ரூ.25 கோடி வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாக Sacnilk நிறுவனம் தெரிவித்துள்ளது.