சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான்! அடுத்த பிளாக் பஸ்டரை கொடுக்கப்போகும் சுதாகொங்கரா!
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான் என்கிற அளவுக்கு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களின் வரிசையை பார்க்கும் போது தெரிகிறது. ஏனென்றால், கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அமரன் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது. அந்த பிளாக்பஸ்டர் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார்.
அந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் நிலையில், தற்போது சூரரைப்போற்று , இறுதிச்சுற்று, என தரமான படங்களை இயக்கிய இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்திருக்கிறது. ஏற்கனவே, இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா புறநானூறு எனும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக இருந்தது.
அதன்பிறகு அந்த திரைப்படத்தில் சில தேதி பிரச்சினை காரணமாக சூர்யாவால் நடிக்க முடியாமல் போன நிலையில் அந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கான படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் மட்டுமின்றி இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவி பிரகாஷின் 100-வது திரைப்படமும் கூட. விரைவில் படத்தின் தலைப்பு படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் பற்றிய விவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.