தமன்னா டிரஸ் செமயா இருக்கா? விலை எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

tamannaahbhatia dress

தமன்னா : நடிகை தமன்னா பொதுவாகவே ஏதாவது விழாவிற்கு செல்கிறார் என்றால் கண்டிப்பாகவே கவர்ச்சியாக மிகவும் பிரமாண்டமாக இருக்கும் உடையை அணிந்து செல்வது வழக்கம். அப்படி தான், தற்போது பாடல் வெளியீட்டு விழாவிற்கு சிவப்பு நிற ஆடையில் அவர் வந்திருந்தது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமன்னா தற்போது நடிக்கும் படங்களை விட கவர்ச்சியாக நடனமாடும் பாடல்கள் அதிகமாகிவிட்டது என்று கூட சொல்லலாம். குறிப்பாக  சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அச்சச்சோ, கவாலா ஆகிய பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். அந்த வகையில், அவர் வரவிருக்கும் ஸ்ட்ரீ 2 திரைப்படத்தில் இடம்பெற்ற (ஆஜ் கி ராத்) என்ற  ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

அந்த பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றபோது அதில் தமன்னா சிவப்பு நிறை உடை அணிந்துகொண்டு வந்தார். அவர் அணிந்து வந்திருந்த அந்த உடை கவர்ச்சியாக இருந்தாலும் கூட மிகவும் பிரமாண்டமாக இருந்த காரணத்தால் கவனத்தை ஈர்த்தது. அந்த நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

TamannaahBhatia
TamannaahBhatia [file image]

இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு தமன்னா அணிந்துகொண்டு வந்திருந்த அந்த உடையின் விலை பற்றிய விவரம் குறித்த தகவலும் வெளியாகி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமன்னா அணிந்து வந்திருந்த உடையின் பெயர்  தில் சுர்க் அமி கோர்செட் (Dil Surkh Ami Corset) . இந்த உடை இந்திய மதிப்பின் படி, 2 லட்சத்திற்கும் மேல் இருக்கும்.

எனவே, தமன்னா அணிந்து வந்த அந்த சிவப்பு நிற தில் சுர்க் அமி கோர்செட் ட்ரஸ் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேல் விலை கொண்டது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாகி எம்மாடி இவ்வளவு விலையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI
Sardar2