ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!
நான் ஒரு போதும் நடிகருடனும் திருமணமானவருடனும் டேட்டிங் செய்யவே மாட்டேன் என திவ்யா பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் என்ன என கேள்விகள் எழுந்த சூழலில், ஜிவி பிரகாஷ் அவருடன் பேச்சுலர் படத்தில் திவ்யா பாரதியுடன் நெருக்கமாக நடித்ததும் இதனால் பாடகி சைந்தவி கோபபட்டதாகவும் செய்திகளை பரப்ப தொடங்கிவிட்டார்கள்.
எனவே, ஜிவி பிரகாஷ் விவாகரத்து ஆனதற்கு காரணமே திவ்யா பாரதி தான் எனவும், அவருடன் நெருக்கமாக நடித்த காரணத்தாலும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதற்கு ஏற்கனவே, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி இருவருமே கிங்ஸ்டன் படத்தில் நடித்தபோது அதனுடைய ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொள்ளும் போது விளக்கம் கொடுத்து பேசியிருந்தார்கள்.
அப்படி இருந்தாலுமே இன்னும் இந்த தகவல் இப்படியான பேச்சுக்கள் குறைந்தபாடு இல்லை. எனவே, அதிகமாக இப்படி வதந்தி தகவல் பரவி வருவதன் காரணமாக நடிகை திவ்யா பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு நான் ஜிவி பிரகாஷுடன் டேட்டிங் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது ” எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு தனிப்பட்ட குடும்ப விஷயத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.யின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒருபோதும் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன், நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன்.
தயவு செய்து ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று நம்பி நான் இதுவரை அமைதியாக இருந்தேன். இருப்பினும், இது ஒரு எல்லையைத் தாண்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், நான் வதந்திகளால் வருத்தப்படமாட்டேன். எதிர்மறையைப் பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். எனது எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை” எனவும் கோபத்துடன் திவ்யா பாரதி தன்னுடய பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 1, 2025