இந்தியாவின் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் காலமானார்!
மறைந்த இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் 2018ல் ரத்னா சத்ஸ்யா விருது,3 முறை கிராமி விருதுகளையும் வென்றிருக்கிறார்.
அமெரிக்கா : இந்தியாவின் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் (73) காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர் ரத்த அழுத்தம் காரணமாக, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பெற்று வந்த சமயத்திலே அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், முதலில் அந்த செய்தியை குடும்பத்தினர் மறுத்தனர். அதன்பிறகு உண்மையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தகவலை தெரிவித்தனர். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி. என பல்வேறு மொழிகளை உருவான பாடல்களில் இசை கலைஞராக இவர் பணியாற்றியுள்ளார்.
மேலும், மறைந்த இசைக்கலைஞர் சங்கீத நாடக அகாடமி விருது 1990ல் வாங்கினார். அதன்பிறகு, 1999ல், யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் என்டோமென்ட் ஃபார் தி ஆர்ட்ஸ் ‘ நேஷனல் ஹெரிடேஜ் பெல்லோஷிப் 2018ல் ரத்னா சத்ஸ்யா விருது, கிராமி விருது 3 முறை என விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.