விடாமுயற்சி பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! பிருத்விராஜ் ஸ்பீச்!
விடாமுயற்சி படத்தின் ட்ரைலர் மிகவும் அருமையாக இருந்ததாக பிருத்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
கொச்சி : விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தினை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இன்னும் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை தொடங்காமல் உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்கிற வகையில் லைக்கா தற்போது இரண்டு படங்களின் ப்ரோமோஷன்களை ஒரே நிகழ்ச்சியிலும் நடத்தியிருக்கிறது.
அதாவது, லைக்கா விடாமுயற்சியை போல மலையாளத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் மோகன்லாளை வைத்து இயக்கியுள்ள எம்புரான் திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. அதில் பிருத்விராஜ் சுகுமாரன், மோகன் லால், மம்முட்டி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு இருந்தார்கள். இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட லைக்கா விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியையும் சிறப்பு விருந்தினராக அழைத்து விடாமுயற்சியை பற்றி பேசி ப்ரோமோஷன் செய்தனர்.
விழாவில் பிருத்விராஜ் சுகுமாரன் விடாமுயற்சி ட்ரெய்லரை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” தமிழ் சினிமாவில் நான் சமீபத்தில் பார்த்த சிறந்த ட்ரெய்லர்களுள் ‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லரும் ஒன்று . அந்த படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் மகிழ்திருமேனி ” அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். எனக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. பிப்.6 விடாமுயற்சி படம் வெளியாகிறது. எனவே, அதற்காக தான் நான் காத்திருக்கிறேன். அந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறேன்” எனவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.