“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
என்னுடைய அடுத்தடுத்த வெற்றி படங்களுக்கும் வாய்ப்புகளுக்கும் காரணம் பாலா அண்ணா தான் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப காலக்கட்டத்தில் நடிக்கவே சிரமப்பட்ட சமயத்தில் பிதாமகன், நந்தா ஆகிய படங்களை சூர்யாவை வைத்து எடுத்து அவருக்கு நடிப்பை சொல்லிக்கொடுத்த ஒரு மாஸ்டர் இயக்குநர் பாலா தான்.
இதன் காரணமாக பாலாவை பற்றி சூர்யா எப்போதுமே பெருமையாக பேசுவார். அவர்களுக்குள் பிரச்சினைகள் வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த நிமிடமே மறந்துவிடுவார்கள். ஏனென்றால், வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்கவிருந்தார். அதன்பிறகு பாலாவுக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட காரணத்தால் படத்திலிருந்து சூர்யா விலகினார்.
அதன்பிறகு அருண் விஜய் படத்தில் இணைந்தார்.அருண் விஜயை வைத்து பாலா படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. எனவே, படத்தின் இசை வெளியிட்டு விழாவோடு சேர்த்து பாலா 25 கொண்டாட்ட விழாவும் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்கள்.
அங்கு தான் பயங்கர டிவிஸ்ட் காத்திருந்தது. ஏனென்றால், பாலாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சூர்யா வரமாட்டார் என கூறப்பட்ட நிலையில், சூர்யா மற்றும அவருடைய தந்தை சிவக்குமார் வருகை தந்தார்கள். அந்த மேடையில் சூர்யா “என்னுடைய அண்ணன் பாலா” எனவும்…பாலா “என்னுடைய தம்பி சூர்யா” எனவும் பாசமழையை பொழிந்தார்கள்.
முதலில் பேசிய சூர்யா ” சேது திரைப்படத்தை பார்த்துவிட்டு நான் மிரண்டுவிட்டேன். ஏனென்றால், ஒரு இயக்குநரால் இப்படி ஒரு படத்தை இயக்க முடியுமா? ஒரு நடிகர் இந்த படத்தில் இப்படி நடிக்க முடியுமா? என ஆச்சரியப்பட்டேன். அடுத்ததாக எனக்கு அதே இயக்குநர் பாலாவிடம் இருந்து நந்தா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் என்னால் அதனை நம்பவே முடியவில்லை. நந்தாவில் நடித்தபிறகு தான் எனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்தது. அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன். இது அனைத்திற்கும் காரணம் அண்ணன் பாலா தான்” எனவும் பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து பேசிய பாலா ” என்னுடைய தம்பி சூர்யா மீது எனக்கு எப்போது தனி மரியாதை ஒன்று இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் அவர் முன்பு நான் சீக்ரெட் கூட பிடிக்கவே மாட்டேன். ஏனென்றால், மற்ற நடிகர்களுக்கு முன்பு புகைப்பிடித்தால் அதற்கு அட்வைஸ் தான் கொடுப்பார்கள். சூர்யா தம்பி மட்டும் தான் வருத்தப்படுவார். அவர் ஒரு நடிகராக இருந்தால் நிச்சயமாக வருத்தப்படமாட்டார். என்னுடைய தம்பியாக இருக்கிறார் என்பதால் அதற்கு வருத்தப்படுகிறார்” என பாலா பேசியுள்ளார்.