அஜித்துடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு மிஸ் ஆயிடுச்சு! விஜய் சேதுபதி போட்டுடைத்த உண்மை!
அஜித்துடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு இதற்கு முன்னாள் ஒரு படத்தில் நடக்காமல் போனது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி ரஜினி, கமல்ஹாசன், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து விட்டார். ஆனால், இன்னும் அவர் அஜித்துக்கு வில்லனாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இருவரும் ஒரே படத்தில் நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? நிச்சயமாக படம் வேற லெவலில் இருக்கும் என்பதால் ரசிகர்கள் இருவருடைய காம்பினேஷனுக்காக காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே, அஜித்துடன் விஜய் சேதுபதி வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் மிகவும் வேகமாக பரவி கொண்டு இருந்தது. அந்த சமயம் வலிமை படம் பற்றிய தெளிவான அப்டேட்டுகள் வெளியாகவில்லை என்பதால் கிட்டத்தட்ட படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என பலரும் நினைத்தனர். அதன்பிறகு படத்தில் கார்த்திகேயன் இருப்பதால் அவர் தான் வில்லன் என தெரிய வந்தது.
எனவே, இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இருப்பினும், தொடர்ச்சியாகவே அஜித் படங்களில் நடித்து வருவதால் விரைவாக விஜய் சேதுபதி அவருடைய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. ரசிகர்கள் எதிர்பார்பதை போல விஜய் சேதுபதியும் அதை தான் எதிர்பார்க்கிறார். இதனை அவரே சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி ” இதுவரை நான் நடித்த பெரிய படங்களின் வாய்ப்பு எனக்கு தானாகவே கிடைத்தது. அதைப்போலவே அஜித் சாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். நானும் அவரும் ஏற்கனவே ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது சில காரணங்களால் பிறகு நடக்காமல் போனது. விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என விஜய் சேதுபதி தெரிவித்தார். அஜித்துடன் நடிக்கமுடியாமல் போன படம் என்ன படம் என தொகுப்பாளர் கேட்டதற்கு படம் பெயர் சொல்லவேண்டாம்..எதற்காக சொல்லணும் என தெரிவித்து படத்தின் பெயரை கூற மறுத்துவிட்டார்.