முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!
பாடகி ஸ்ரேயா கோஷலின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால், அவர் முக்கியமான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும் மனம் வருந்தும் அளவுக்கு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், கடந்த சில நாட்களாகவே ஸ்ரேயா கோஷல் எக்ஸ் வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும் இது குறித்து எக்ஸ் குழுவை தொடர்பு கொண்டும் முடியவில்லை எனவும் அறிவித்து ரசிகர்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” வணக்கம் நண்பர்களே என்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 13 முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதைத் திரும்பப் பெற X குழுவைத் தொடர்பு கொண்டேன், ஆனால் அவர்களுடைய தரப்பில் இருந்து எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. என்னால் இனி என் கணக்கில் உள்நுழையவே முடியாது என நினைக்கிறேன். அது தான் முடிவு என்றால் நிச்சயமாக என்னுடைய கணக்கை அழித்துவிடுவேன்.
தயவுசெய்து நீங்கள் அனைவரும் அந்தக் கணக்கிலிருந்து அனுப்பப்படும் எந்த லீங்ஸ் மற்றும் போஸ்டுகளை க்ளிக் செய்யவேண்டாம். அப்படி அதில் இருந்து இனிமேல் எதுவும் போஸ்ட்கள் வந்தாலோ லிங்ஸ் வந்தாலோ அது மர்ம நபர்கள் மோசடிக்காக அனுப்பலாம். எனவே, தயவு செய்து கவனமாக இருங்கள். என்னுடைய கணக்கு மீட்கப்பட்டால், நான் ஒரு வீடியோ மூலம் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவிப்பேன்” எனவும் ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயா கோஷலை எக்ஸ் வலைதள பக்கத்தில் 6 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். எனவே, தன்னுடைய ஐடி மூலம் தன் பெயரை வைத்து மர்ம நபர்கள் ஏமாற்றிவிட கூடாது என்ற காரணத்தால் ஸ்ரேயா கோஷல் இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் சீக்கிரம் உங்களுடைய ஐடி மீட்கப்படவேண்டும் என கூறி வருகிறார்கள்.
View this post on Instagram