எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
சிம்புவின் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்து ரஜினிகாந்த் ஆச்சரியப்பட்டதாக இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு இருக்கும் அந்த மாஸான ரசிகர்கள் பட்டாலும் குறையவே குறையாது என்று சொல்லலாம். இன்னும் அவருடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும் கூட அவருடைய படங்களுக்கு சிறப்பான ஓபனிங் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்கள் கூட இந்த மனுஷன் படம் நடிக்கவில்லை என்றால் கூட இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே என ஆச்சரியத்துடன் பார்ப்பதுண்டு. அப்படித்தான் நடிகர் ரஜினிகாந்த்தும் சிம்புவின் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் என்னை அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிராகன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய போது அடுத்ததாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு நான் சிம்பு படத்தை இயக்குகிறேன் என கூறினேன் உடனே சூப்பர் சூப்பர் என சொன்னார் அதன் பிறகு சிம்பு சமீபகாலமாக அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு அந்த ரசிகர்கள் ஃபாலோ பயங்கரமாக இருக்கிறது என்று சொன்னார். நானும் அதற்கு ஆமாம் சார் அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேன்” எனவும் அஸ்வந்த் மாரிமுத்து தெரிவித்தார்.
இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் இந்த மாதிரி ரசிகர்கள் கூட்டம் சிம்புவுக்கு மட்டும்தான் இருக்கும் என தெரிவித்து வருகிறார்கள். மேலும், சிம்பு தற்போது தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு 49,50,51 என தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார். இதில் 51-வது படத்தை தான் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.