இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!

இறந்தவர்களின் குரலை வைத்து ஏன் பாடலை உருவாக்கணும்? என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Harris Jayaraj

சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில்,  சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்று கூறலாம். குறிப்பாக, இசையமைப்பாளர்கள் பலரும் இறந்த பழைய பிரபலமான பாடகர்களின் குரலை AI தொழில் நுட்பம் வைத்து மீண்டு கொண்டு வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் பயன்படுத்தியிருந்தார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் லால் சலாம் படத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்யா வைத்து திமிரி எழுடா என்ற பாடலையும், யுவன் சங்கர் ராஜா கோட் படத்தில் மறைந்த பாடகி பவதாரிணி வைத்து சின்ன சின்ன கண்கள் பாடல்களை AI மூலம் செய்திருந்தார்கள். இது ஒரு ட்ரெண்டாகவே மாறியுள்ள நிலையில், இப்படி செய்வதற்கு இப்போது இருக்கும் பாடகர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு அவரும் பதில் அளித்தார். அப்போது தான் AI மூலம் மறைந்த பாடகர்களின் குரல்களை இசையமைப்பாளர்கள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள் அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் எந்த பாடகர் குரலை AI மூலம் கொண்டு வர விருப்பப்படுகிறீர்கள்? என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ஹாரிஸ் ஜெயராஜ் ” நான் அதிகமாக AI உபயோகம் செய்தது இல்லை. எனவே, உண்மையில் எனக்கு அதைப்பற்றி அதிகமாக தெரியாது. ஆனால், நான் எதிர்காலத்தில் கூட அதனை உபயோகம் செய்யமாட்டேன். ஏனென்றால், பாடகர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே, அதற்காக AI? பாடகர்கள் இல்லை என்றால் நாம் அதனை பற்றி யோசிக்கலாம் ஆனால், இங்கு திறமை இருந்தும் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது.

என்னைப்பொறுத்தவரை உயிரோடு இருக்கும் பாடகர்கள் தான் பிடித்தவர்கள். எனவே, நான் இப்போது இருப்பவர்களுக்கு தான் வாய்ப்புகள் கொடுப்பேன். இருப்பவர்களை கொண்டாடுங்கள் இல்லாதவர்களுடைய குரலை ஏன் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறீர்கள். அவர்கள் எல்லாம் ஏற்கனவே பாடி பிரபலமாகிவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு பதிலாக அவர்களுடைய பிள்ளைகளுக்கு கூட வாய்ப்பு கொடுக்கலாம். அப்படி கொடுத்தால் அவர்களே சந்தோஷப்படுவார்கள்” எனவும் ஹாரிஸ் ஜெயராஜ் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்