அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!
நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் சேர்க்கப்பட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பேசியுள்ளார்.

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி கட்டம் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக ரஜினி ஜெயிலர் 2 படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இதில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி வெளியாகம் என அறிவிக்கப்பட்டு விட்டது. விரைவில் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படங்களில் பிசியாக இருக்கும் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் வீடியோ காணொளி மூலம் இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் சில விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” இன்றயை காலத்தில் செல்போன் யுகத்தில் இளைஞர்கள் ஏன் சில பெரியவர்கள் கூட மூழ்கியுள்ளார்கள். அவர்கள் பாரத நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் தெரியாமல் உள்ளனர்.
நமது கலாச்சார பெருமையை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளனர் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், மேற்கத்திய நாட்டு மக்கள் இங்கு நிம்மதி இல்லை சந்தோசம் இல்லை என இந்தியாவுக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், அவர்கள் யோகா போன்ற வாழ்வியலை நாடுகிறார்கள். எனவே, நம்முடைய பாரத நாட்டின் மகோன்னதனமான கலாசாரம், சம்பிரதாயம், அருமை, பெருமையை கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும்.
இது தொடர்பாக லதா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” எனவும் ரஜினிகாந்த் பேசியுள்ளார். லதா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீ தயா ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் ‘பாரத சேவா’ தொடக்க விழாவில் தான் இந்த விஷயங்களை ரஜினிகாந்த் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025