சும்மாவா சொன்னாங்க தளபதி கிங்குனு? ‘ஜனநாயகன்’ வெளிநாட்டு உரிமை எவ்வளவு கோடி தெரியுமா?
'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமைகள் சுமார் ரூ. 75 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : நடிகர் விஜய் அவருடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியல் பயணத்தில் ஈடுபடவிருக்கிறார். எனவே, அவருடைய கடைசி திரைப்படம் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக நிலவியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டிலுடன் இரண்டு லுக் போஸ்ட்டர்கள் வெளியிடப்பட்டு இருந்தது.
அதில் இரண்டாம் லுக் போஸ்டரில் விஜய் கையில் சட்டை ஒன்றை வைத்து கொண்டு இருந்தார். அதில் நான் ஆணையிட்டால் என்ற வசனமும் எழுதப்பட்டது. எனவே, போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு வைத்து பார்க்கும்போதே படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்பது தெரிந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், எச்.வினோத்தும் கொஞ்சம் அரசியல் படத்தில் இருக்கும் என யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும்போது கூறியிருந்தார்.
எனவே, எந்த மாதிரி ஒரு அரசியல் கருத்தை இந்த படத்தின் மூலம் விஜய் மக்களுக்கு தெரிவிக்க இருக்கிறார் என படத்திற்கு எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது படம் வெளியாவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு விற்பனை உரிமையில் பிரமாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. அது என்ன சாதனை என்று விவரமாக இந்த பதிவில் பார்ப்போம்.
அதன்படி, விஜய் நடிப்பில் உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமைகள் சுமார் ரூ. 75 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, விஜய் நடித்த படங்களில் வெளிநாட்டு உரிமைக்கு அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாகும். இதற்கு முன்னதாக அவருடைய நடிப்பில் வெளியான கோட் படம் ரூ.53 கோடி வரை விற்பனை ஆகியிருந்த நிலையில், அதனை ஜனநாயகன் படம் மிஞ்சியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025