உனக்குள் இப்படி ஒரு திறமையா? மோனோஜை பார்த்து கண்ணீரை விட்ட தந்தை பாரதிராஜா!

தான் இயக்குனராக மாறியதை பார்த்துவிட்டு தனது தந்தை பாரதிராஜா எமோஷனலாக அழுததாக இறப்பதற்கு முன்பு மோனோஜ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

manoj bharathiraja and bharathiraja

சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவர் முன்னதாக பழைய பேட்டிகளில் பேசிய விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது தனக்காக அப்பா பாரதிராஜா கண்ணீர் விட்ட விஷயங்களை பற்றி  பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு நடிகராக ஆவதை விட இயக்குனராக பணியாற்றுவது தான் பிடித்திருந்தது. எனக்கு படங்களை இயக்குவதில் தான் ஆர்வமும் அதிகமாக இருந்தது.

என்னுடைய தந்தை என்னை நடிகராக அறிமுகம் செய்து வைத்துவிட்டார். ஆனால், ஒரு சில படங்களில் நடித்தாலும் நடிகராக என்னால் வெற்றிபெறமுடியவில்லை. அதன்பிறகு நான் கதை எழுத தொடங்கினேனேன். கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேலாக இயக்குநராகவேண்டும் என போராடிக்கொண்டு இருந்தேன். எனக்கான வாய்ப்புகள் அந்த சமயத்தில் அமையவில்லை. நான் நினைத்திருந்தார்கள் அப்பாவை தயாரிக்க வைத்து ஒரு படத்தை இயக்கியிருக்கலாம் ஆனால், அப்பாவுடைய பின் புலம் இல்லாமல் வரவேண்டும் என ஆசைப்பட்டேன்.

அந்த சமயத்தில் தான் சுசீந்திரன் சார் என்னை அழைத்து ஒரு கதையை கூறி இந்த படத்தை நீங்கள் இயக்குங்கள் நான் இந்த படத்தை தயாரிக்கிறேன் என கூறினார். அப்படி தான் மார்கழி திங்கள் படம் தொடங்கப்பட்டது. படத்தில் நடிக்க வைக்க என்னுடைய தந்தை வந்தார். அவரை முதல் நாள் முதல் காட்சி எடுக்கும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால், என்னுடைய தந்தையால் அங்கு நிற்க கூட முடியவில்லை..ஏனென்றால், அந்த அளவுக்கு எமோஷனலாகிவிட்டார்.

படப்பிடிப்பு தளத்திற்கு வராமல் கேரவனுக்குள் அமர்ந்து கொண்டு மிகவும் அழுதார். நான் உடனே என்ன ஆச்சு அப்பா? உடல் நிலை சரியில்லையா? என கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் இல்லைடா..உனக்குள் இப்படி ஒரு திறமையா? இவ்வளவு திறமையை இருந்திருக்கடா என கேட்டார்.  அதன்பிறகு உன்னை நான் தான் டா இயக்குனராக கொண்டு வந்திருக்கவேண்டும் நான் தான் தப்புசெய்துவிட்டேன். இயக்குநர் சுசி உன்னை கொண்டு வந்துவிட்டார். என்று என்னுடைய தந்தை என்னை பற்றி பேசும்போது எனக்கு மிகவும் எமோஷனலாகிவிட்டது.

ஒரு மகன் தந்தை முன்னாடி தனக்கு என்ன திறமை இருக்கிறது என்று காண்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்குவது உண்டு. அப்படி தான் நான் ஏங்கினேன் என்னுடைய தந்தையிடம் அப்படி வார்த்தைகள் கிடைத்தவுடன் எமோஷனலாகிவிட்டேன்” எனவும் மனோஜ் அந்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் அவர் இயக்குனராக அறிமுகமான மார்கழி திங்கள் படம் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்