பேவாட்ச் தொடரின் பிரபலம் பாமெலா பாக் தற்கொலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த ஹாலிவுட் சினிமா!
பாமெலா பாக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஹில்ஸ் : பிரபலமான பேவாட்ச் (Baywatch) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அமெரிக்கன் நடிகை பாமெலா பாக் (Pamela Bach), 62 வயதான இவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹாலிவுட் சினிமாவிலும் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நடிகர் டேவிட் ஹசல்ஹோஃப்பின் (David Hasselhoff) முன்னாள் மனைவியாவார்.
பாமெலா பாக் நடிகர் டேவிட் ஹசல்ஹோஃப்பின்னை காதலித்து கடந்த 1989-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் 2006-ஆம் ஆண்டே இருவரும் விவகாரத்து செய்துகொண்டார். அதன்பின் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.
அதன்பின், சமீபகாலமாக பெரிய அளவில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்ற காரணத்தால் கலிபோர்னியா வில் உள்ள அவருடைய வீட்டில் பாமெலா பாக் வசித்து வந்துள்ளார். மன வருத்தத்தில் இருந்த அவர் (நேற்று) புதன்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு அவர் மயக்கமடைந்ததாக வந்த தகவலின் பேரில், வீட்டிற்கு துணை மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். அப்போது, அவரே தலையில் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் தெரிய வந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான கரணம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கொலையா அல்லது தற்கொலையா? என்கிற கோணத்திலும், தற்கொலையாக இருந்தால் அதற்கு காரணம் என்ன என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய மறைவுக்கு முன்னாள் கணவர் டேவிட் ஹசல்ஹோஃப்பின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் ” பாமெலா பாக் சமீபத்தில் காலமான செய்தியை கேட்டு நானும், எங்களுடைய குடும்பமும் மிகவும் வருத்தமடைந்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவர் எங்களுடைய மீது அன்பு மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியதற்கு நாங்கள் அவருடைய குடும்பத்திற்கு நன்றியுள்ளவர்களாக ஆதரவாக இருக்கிறோம். அதே சமயம் இந்த சோகமான சமயத்தில் எங்களுடைய தனியுரிமைக்கு மதிப்பு அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025