மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இயக்குநராக இருந்தால் தான் காப்பி என்கிற விமர்சனம் வருகிறது என்றால் தயாரிப்பாளராக ஒரு படத்தில் பணியாற்றினால் கூட அட்லீயை காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
![atlee and loki](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/atlee-and-loki-.webp)
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே அளவுக்கு படத்தில் இடம்பெற்ற காட்சிகளை அட்லீ அந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்..இந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார் என்கிற ஒரு விமர்சனம் பரவலாக கிளம்பிவிடும். அதெல்லாம் வந்தாலும் என்னுடைய படம் எப்போதும் தரமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு தோல்வி படத்தை கூட அட்லீ கொடுக்கவில்லை.
அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறது. இருப்பினும், காப்பி என்கிற விமர்சனம் மட்டும் அவரை விட்டு சென்றபாடு இல்லை. அவர் இயக்குநராக படம் எடுத்தால் தான் அந்த படத்தின் காட்சிகள் காப்பி என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள் என்று பார்த்தல் தயாரிப்பாளராக ஒரு படத்தை தயாரித்தால் கூட அதுவும் காப்பி என்று தான் சொல்கிறார்கள்.
ஏனென்றால், அட்லீ தற்போது அவர் தமிழில் விஜய்யை வைத்து இயக்கி பெரிய ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்காமல் தயாரித்துள்ளார். பேபி ஜான் என்கிற பெயரில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக வருண் தவான் நடித்துள்ளார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படமும் ஹிந்தி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் என்னவோ படத்தை கொண்டாடி வருகிறார்கள். ஒரு பக்கம் கொண்டாடி வரும் நிலையில், மற்றொரு பக்கம் அட்லீயை கலாய்த்து வருகிறார்கள். ஏனென்றால், படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் வருவது போல காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. அந்த காட்சியின் போது அவரை அறிமுகம் செய்வது இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை போல இருப்பதாக கலாய்த்து வருகிறார்கள்.
The Agent name card trend started by Loki aka Lokesh Kanagaraj in LCU movie #Vikram ????????????
Now #Atlee copy the idea to apply in a bollywood movie #BabyJohn for @BeingSalmanKhan as Agent #BhaiJaan ????????????
What a shame ra @Atlee_dir ???????????? https://t.co/QJDOjv8p16
— Naveen Anirudh???????? (@NaveenAnirudh5) December 24, 2024
#BabyJohn is #atlee‘s #vikram but a downgrade version#IYKYK #VarunDhawan pic.twitter.com/n5JNXjr6p1
— Md Aquib Anwer (@mdaquibanwer) December 25, 2024
Expression and mannerism matters, which @BeingSalmanKhan has lost in him totally
#BabyJohn pic.twitter.com/VFwco9ezfT
— ???????????????????????? ????????????????????ᴾᵃᵗʰᵃᵃⁿ ² (@fromepiglottis) December 24, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025![donald trump angry](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/donald-trump-angry.webp)
“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!
February 11, 2025![NarendraModi -Thaipoosam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/NarendraModi-Thaipoosam-.webp)
INDvENG : 3வது ஒருநாள் போட்டி… வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்! இரு அணி வீரர்கள் விவரங்கள்!
February 11, 2025![India vs England 3rd ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/India-vs-England-3rd-ODI-.webp)
சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்தியா சார்பாக யாரெல்லாம் விளையாடலாம்..முன்னாள் வீரர்கள் சொல்வதென்ன?
February 11, 2025![champions trophy 2025 india squad](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/champions-trophy-2025-india-squad.webp)