பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

நடிகர் அஜித் குமார் பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Ajithkumar get padmabusan award

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025) விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் தவிர, நந்தமூரி பாலகிருஷ்ணா,  ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. பத்மபூஷன் விருதுகளை வென்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.  வழக்கமாக எந்த விருது வழங்கும் விழாவிற்கும் வருகை தராத அஜித்குமார் இந்த விருதை வாங்கிக்கொள்வதற்கு இன்று காலை தனது குடும்பத்துடன் டெல்லிக்கு வருகை தந்திருந்தார்.

வருகை தந்த அவருக்கு பத்மபூஷன் விருதையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். விருது வருக்கு வழங்கப்பட்டதை பார்த்த அவருடைய குடும்பம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவர் விருது வாங்கிய புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், அஜித் குமாருக்கு விருது வழங்கப்பட்டதை போலவே இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. அவர்களும் உற்சாகமாக விருதுகளை வாங்கிச்சென்ற நிலையில் அவர்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்