ஆக்ஷன் கிங் அர்ஜுனின் லியோ லுக்.! படத்தில் யாருக்கு வில்லன் தெரியுமா?
லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், விஜய் நடித்துள்ள இந்த லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நேற்று சென்னையில் நடிகை ஷாமிலி நடத்திய ஓவிய கண்காட்சிக்கு வருகை தந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் லியோ லுக்கில் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார்.
இதுவரை வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இவர் நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த விழாவில், இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஜய் பக்கம் அர்ஜுன்?
இந்த படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய் தத் நடிப்பதாகவும், மன்சூர் அலிகான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் அவரது குடும்பத்தினராகவும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நா ரெடி பாடலில் இவர்கள் எல்லாம் இடம் பெறுவார்கள் என்று ஒரு கிசுகிசுப்பு இருந்து வருகிறது.
இதைவைத்து பார்க்கும்பொழுது, லியோ lcu-ல் வரும் எனவும், விக்ரம் திரைப்படம் போல் இவர்கள் எல்லாம் போதை கும்பல்களை பிடிப்பவர்களாக நடிக்கப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.