2 ஜூலை 2022 அன்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்றார் சினி ஷெட்டி . இவர் பிறந்தது மும்பை தற்போது வசிப்பது கர்நாடகா. தன்னுடன் போட்டியிட்ட 31 போட்டியாளர்களை வீழ்த்தி மிஸ் இந்தியா 2022 பட்டத்தை தன்வசமாக்கியுள்ளார்.. அழகான உருவம் , கவர்ச்சியான ஸ்டைல் இவற்றைத் தவிர நடுவர்களுக்கு அவர் அளித்த பதில் இதுவே இறுதி போட்டியில் அவர் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
யார் இந்த சினி ஷெட்டி ?
சினி ஷெட்டி இவர் இந்தியாவில் மஹாராஷ்டிரம் மாநிலத்தி உள்ள மும்பையில் 2000ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தந்தை பெயர் சதானந்த் ஷெட்டி, தயார் பெயர் ஹேமா ஷெட்டி. சகோதரர் ஒருவர் உள்ளார் அவர் பெயர் ஷிகின் ஷெட்டி.
மும்பையில் உள்ள St.டொமினிக் சாவியோ வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் . பின்னர் , வித்யாவிஹாரில் உள்ள எஸ்.கே. சோமையா பட்டப்படிப்புக் கலை, அறிவியல் மற்றும் வணிகத்தில் கணக்கியல் மற்றும் நிதித்துறையில் பட்டம் பெற்றுள்ளார் .தற்போது இவர் CFA( chartered financial analyst) படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது .
இன்ஸ்டாகிராம் to மிஸ் இந்தியா :
சினி ஷெட்டி மாடலிங் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டாராக இருக்கிறார். அவர் ஒரு நடனப் பிரியர் ஆவர். நடனம் அவரின் பொழுதுபோக்காக மாறியது. மேலும் ,சினி ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர். மீண்டும் மாடலிங்கிற்கு வந்த அவர், மாடலிங் ஏஜென்சியான பர்பிள் தாட்ஸ் உடன் ஒப்பந்தம் செய்தார். கடந்த சில ஆண்டுகளாக, ஏர்டெல், ஃப்ரீ ஃபயர், பாண்டலூன்ஸ் போன்ற பல பிராண்டுகளுடன் அவர் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் அழகுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் . இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஃபெமினாவினால் “மிஸ் இந்தியா கர்நாடகா 2022” என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது, அவர் “மிஸ் இந்தியா 2022” பட்டத்துடன் ஃபெமினாவால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு பட்டங்களையும் ஒரே வருடத்தில் சம்பாதிப்பது என்பது சுலபம் அல்ல. இவற்றின் மூலம், அவர் பல்வேறு ஊடக வலைத்தளங்களில் இடம்பெற்றார் மற்றும் சிறிது நேரத்தில் சமூகவலைதங்கள் முழுவதும் பிரபலமடைந்துவிட்டார்.
அவரது சமூக ஊடக வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். நடனம் ஆடுவது அவரது பொழுதுபோக்காக இருந்ததால், சமூக வலைதளத்தில் நிறைய நடனக் காட்சிகளைப் பகிர்ந்து வந்தார் மற்றும் அவரது நடன ரீல் ஒன்று கிட்டத்தட்ட 20 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வைரலானது. தற்போது, தனது புகைப்படங்களை பகிர்வதன் மூலம் இணையதளத்தில் அவருக்கு 65 ஆயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். சிறிது நேரத்தில், அவர் 100k பின்தொடர்பவர்களின் மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அவர் இந்திய மாடல் மேலாண்மை நிறுவனமான பர்ப்பிள் தாட்ஸால் நிர்வகிக்கப்படுகிறார்.
சுற்றுப்பயணம் செல்ல விரும்புவர் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
மேலும் ,மிகவும் பிடித்த படம் Into The Wild.
இன்ஸ்டாகிராமை தவிர வேறு எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை .
பிரியங்கா சோப்ராவை முன்மாதிரியாக கொண்டு மாடலிங் செய்து வருகிறாராம் .
சினி இயற்கையை விரும்புபவராம் .
அவ்வளவுதான். சீனி ஷெட்டி பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் இது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…