ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா விவாகரத்து: “இருவரும் மகிழ்ச்சியாக இல்லை”…உண்மையை உடைத்த
இந்த பிரிவை அமைதியாகவும் நட்புடன் முடிக்க வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா இருவரும் விரும்புகிறார்கள் என வழக்கறிஞர் வந்தனா ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கே அப்படி இருந்தது என்றால் 30 வருடங்கள் ஒன்றாக இருந்து திடீரென இருவரும் பிரியும் நிலைமை வந்தால் அவர்களுக்குள் எப்படி இருக்கும்? சொல்ல முடியதா அளவுக்கு வேதனையில் தான் இருவருமே இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.
விவாகரத்து செய்தி அறிவிக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மான் ” வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத பிரச்சினை இருப்பது தெரிகிறது. எங்கள் இதயங்கள் உடைந்து இருக்கிறது, அதன் வலி கூட சொல்லமுடியவில்லை. இந்த சம்பவத்திற்கு ஏதாவது ஒரு அர்த்தத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். ஆனால் உடைந்த துண்டுகள் மீண்டும் ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பக் கூடாது என்பதையும் புரிந்து கொள்கிறோம்” என வேதனையுடன் அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, இருவரும் இந்த முடிவு மகிழ்ச்சியாக எடுக்கவில்லை என்பதை இருவருக்கும் விவாகரத்து வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் வன்தனா ஷா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இருவரும் நீண்ட ஆண்டுகள் அதாவது 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு இப்போது பிரிகிறார்கள் என்றால் அது மிகவும் வேதனையான விஷயம் தான்.
இதுபோன்ற நீண்டகால திருமணங்களில் பிரிவு என்பது எவருக்கும் எளிதான அல்லது மகிழ்ச்சிகரமான விஷயம் அல்ல. அவர்களுக்குள் சுமூகமான அணுகுமுறையுடன் இந்த பிரிவை பேசி முடிவெடுத்துள்ளார்கள். இந்த பிரிவை அமைதியாகவும் நட்புடன் முடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். திருமணம் செய்வது சந்தோஷமாக இருக்கவே, பிரிவுக்கு என்கிற எதிர்பார்ப்புடன் அல்ல. ஆனாலும், சில நேரங்களில் வாழ்க்கை எதிர்பாராத முடிவுகளுக்கு அழைத்துச் செல்கிறது. இந்த முடிவில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை” எனவும் வன்தனா ஷா கூறியுள்ளார்.