ஜாகிர் ஹுசைன் மறைவு: கமல், ரகுமான் இரங்கல் தெரிவிப்பு.!

ஜாகிர் ஹுசைன் மறைவுக்கு பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

zakir hussain passed away kamal

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் (73) காலமானார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்றிரவு ஐசியு-வில் இருந்த அவர் காலமானதாக தகவல் வெளியான நிலையில், அவரது குடும்பத்தினர் முதலில் மறுத்திருந்தனர். அதன்பிறகு உண்மையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், ஜாகிர் ஹுசைன் மறைவுக்கு பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

கமல்

நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “ஜாகிர் பாய். சீக்கிரமாக எங்களை பிரிந்துவிட்டீர்கள். ஆனாலும் அவர் நமக்குக் கொடுத்த காலங்களுக்காகவும், அவருடைய கலையின் வடிவத்தில் அவர் விட்டுச் சென்றதற்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். குட்பை மற்றும் நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் தளத்தில், “ஜாகிருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், “ஜாகிர் பாய் ஒரு உத்வேகம், தபேலாவை உலகப் புகழ்ச்சிக்கு உயர்த்திய ஒரு உயர்ந்த ஆளுமை. அவரது இழப்பு நம் அனைவருக்கும் அளவிட முடியாதது. பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் இணைந்து ஒரு ஆல்பத்தை திட்டமிட்டிருந்தாலும், அவருடன் ஒத்துழைக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். நீங்கள் உண்மையிலேயே தவறவிடப்படுவீர்கள்.  உங்களை மிஸ் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்