மறைந்த டேனியல் பாலாஜி: கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்.!

Published by
கெளதம்

Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு முக்கிய பிரபலங்கள், இயக்குநர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடரில் ‘டேனியல்’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேனியல் பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் வழங்கி சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார்.

48 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். டேனியல் பாலாஜி உயிரிழந்த தகவலறிந்ததும் முதல் ஆளாக இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவரின் கண்களை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்நின்று மேற்கொண்டனர்.

அவரின் திரைப்பயணத்திற்கு முக்கிய காரணமாக இருந்த இவர்கள், கண்ணீருடன் இறுதி பயணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இப்பொழுது, டேனியல் பாலாஜியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய் சேத்துபதி, அதர்வா உள்ளிட்டோர் அஞ்சலை செலுத்தியதோடு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

டேனியல் பாலாஜியின் மறைவை நம்பமுடியவில்லை, சித்தி தொடரில் நெகடிவ் ரோலில் நடித்த போதிலும் அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. அருமையான மனிதர், அவரது மறைவு என்னை துயரில் ஆழ்த்துகிறது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

3 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

16 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

32 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

34 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

41 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

46 mins ago