Pushpa 2 Teaser: அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது.
‘புஷ்பா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா -2’ படத்தின் டீசர் வரும் 8-ஆம் நாள் வெளியாகும் என பட நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டும் என திரை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்நிலையில் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக ‘புஷ்பா 2’ டீசர் என்ற ஹேஷ்டேக் எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரெண்டாகி வருகிறது. முதல் பகுதியை போலவே இதில் ஃபகத் பாசில், ரஷ்மிகா மந்தனா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், அனசூயா பரத்வாஜ், ராவ் ரமேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த பெரிய பட்ஜெட் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 15 ஆகஸ்ட் 2024 அன்று வெளிவர உள்ளது.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…