இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதிகட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. எப்போது தான் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் தமன் சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- கெத்தான லுக்கில் சிம்பு…வைரலாகும் “பத்து தல” படப்பிடிப்பு புகைப்படங்கள்.!
அதன்படி, “வாரிசு” படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் பிரின்ஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட கொண்டாட்டத்தில் தீபாவளியுடன் சேர்ந்து பாடலை ஆடி பாடி கொண்டாட உள்ளனர்.
கண்டிப்பாக இந்த பாடலை விஜய் தான் பாடி இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரிசு படத்தின் காட்சிகள் லீக் ஆகி இருந்தது. அதில் வரும் காட்சியிலும் விஜய் தான் பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…