மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஹிந்தியில் மொழி மாற்றம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம், சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார்.
இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது, ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார்.
அது மட்டுமின்றி படத்தை ரிலீஸ் செய்து ஆகவேண்டும் என்ற காரணத்தால் தான் அந்த பணத்தை கொடுத்துவிட்டதாகவும் இது தொடர்பான வருத்தமான வீடியோ ஒன்றையும் வெளியீட்டு இருந்தார். அதில் இனிமேல் வரும் காலங்களிலாவது இப்படி நடக்கவேண்டாம் தயவு செய்து இந்த விவகாரம் குறித்து விரைவாக நடவேடிக்கை எடுக்கவேண்டும்.
இதன் காரணமாக தான் இந்த தகவலை மகராஷ்டிரா முதல் அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் எனவும் தெரிவித்து இருந்தார். பிறகு, செப்டம்பர் 29-ஆம் தேதி விஷாலின் இந்த புகாருக்கு உடனடியாக பதில் அளித்த மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, விஷால் அளித்த புகாரின் அடிப்படையில், 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வலையில், அக்டோபர் 5ம் தேதி சிபிஐ விசாரணையை நடத்தியது. அப்போது, சில முக்கிய விவரங்கள் பெறப்பட்டதாக தகவல் வெளியானது.
நடிகர் விஷால் அளித்த லட்சம் புகார்! அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ!
இந்த நிலையில், இரண்டாம் நாளாக இன்று லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணன், லஞ்சம் பெற்ற மேனகா ஜுஜூ ராமதாஸ், ராஜன் உள்ளிட்ட தரகர்களிடம் மும்பை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…