மணிரத்னம் : இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய படங்களில் எல்லாம் ஒரு சில குறிப்பிட்ட நடிகைகள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுப்பார். அப்படி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள சுஜிதாவுக்கு மணிரத்னம் தன்னுடைய 3 படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சுஜிதாவுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதுமட்டுமின்றி, மற்றோரு இயக்குனர் இயக்கிய படத்திலும் ஹீரோயினாக நடிக்க வைக்க சுஜிதாவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மணிரத்னம் கேட்டாராம்.
அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பாரதிராஜாவிடம் தான். இயக்குனர் பாரதி ராஜா தன்னுடைய மகன் மனோஜ் பாக்யராஜை வைத்து தாஜ்மஹால் என்ற படத்தினை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு யோசித்துக்கொண்டு இருந்தார்களாம். அப்போது சுஜிதா நல்ல நடிகை இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என மணிரத்னம் சிபாரிசு செய்தாராம்.
ஆனால், அந்த சமயம் நடிகை சுஜிதா பள்ளிக்கூடம் தான் படித்துக்கொண்டு இருந்தாராம். எனவே, அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இருப்பினும், மணிரத்னம் சிபாரிசு செய்த காரணத்தால் தாஜ்மஹால் படத்தில் நடிக்க பாரதிராஜாவின் அலுவலகத்தில் இருந்து போன் வந்தபோது நடிக்க மறுத்துவிட்டாராம். அப்படி கால் வந்ததே எனக்கு மிகப்பெரிய விஷயம் என இந்த விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது சுஜிதா கூறியுள்ளார்.
தன்னுடைய சிறிய வயதில் இருந்தே படங்களில் நடித்து கொண்டு இருக்கும் நடிகை சுஜிதா தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் குக் ஆக கலந்துகொண்டு இருக்கிறார். அதைப்போல, சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…