நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!
அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில், நடிகை நயன்தாரா நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் `அன்னபூரணி’. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்தார்.
திரையரங்குகளில் வெளியாகி வெற்றி அடைந்த இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி இணையதளத்திலும் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், நடிகை நயன்தாரா மீது மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் புகார் அளித்துள்ளார்.
அஜித் படத்தில் நடிக்க மறுத்த அருண்விஜய்! காரணம் என்ன தெரியுமா ?
அன்னபூரணி திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் கூறி மும்ப்பை காவல் நிலையத்தில் நயன்தாரா மீது புகார் அளித்துள்ளார். வேண்டும் என்றே இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, நயன்தாரா ஜெய், அன்னபூரணி படத்தின் தயாரிப்பாளர்கள் மீதும் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.