Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும் வசூலை பெற்ற கொண்ட மலையாள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இது மலையாள சினிமாவை தாண்டி தமிழிலும்சக்கை போடு போட்டது.
இந்த நிலையில், இப்படம் வெற்றி பெற்றால் படத்தின் லாபத்தில்பங்கு தருவதாகக் கூறி ரூ.7 கோடி முதலீடு பெற்று ஏமாற்றியதாகவும், படம் அமோக வெற்றி பெற்றும், தனக்கு எதுவும் கிடைக்கவில்லை.
படத்திற்காக முதலீடு செய்த தொகை உட்பட எந்த பணத்தையும் இன்னும் தனக்கு வழங்கவில்லை என்று கூறி தனிநபர் ஒருவர் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி ரூ.7 கோடி முதலீடு பெற்று ஏமாற்றிய படத்தின் தயாரிப்பாளர்களான பரவா பிலிம்ஸ் மற்றும் பங்குதாரர் ஷான் ஆண்டனி ஆகியோர் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கேரளா மாநிலம் அரூரைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து மரடா போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…