ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஷா சந்தோஷ். மானபங்கம் செய்ய முயன்ற நபரை போலீசிடம் பிடித்து ஒப்படைத்த நடிகை சனுசாவை நேரில் அழைத்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா ((Loknath Behera)) பாராட்டுத் தெரிவித்தார்.
இவர் கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாவலி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது, ஆன்டோ போஸ் என்ற நபர் தம்மை மானபங்கம் செய்ய முயன்றதாக புகார் கூறியிருந்தார்.
திருச்சூர் ரயில் நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தபோது, அந்த நபர் தம்மை விட்டு விடும்படி கெஞ்சியதாகவும், எனினும், தவறு செய்த அந்த நபர் சட்டப்படி தண்டிக்கப்படுவதோடு, அவர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக துணிந்து புகார் கொடுத்ததாகவும் சனுசா கூறியிருந்தார். இந்நிலையில், துணிச்சலாக செயல்பட்டதற்காக, நடிகை சனுசாவை நேரில் அழைத்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…