சினிமா

படுக்கை அறைக்குள் கார் பார்க்கிங் வசதி! சந்திரபாபு கட்டிய அந்த பிரமாண்ட வீடு?

Published by
பால முருகன்

காமெடி காதாபாத்திரங்களில் நடித்து 1060 காலகட்டத்தில் கலக்கியவர் என்றாலே நடிகர் சந்திரபாபுவை கூறலாம். தமிழ் சினிமாவில் தன அமராவதி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி வாழ பிறந்தவள், குலேபகவல், நல்ல தங்கல், பாண்டித்தேவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். அந்த சமயம் எல்லாம் எம்ஜி.ஆர் நடிக்கும் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சந்திரபாபு தான் நடித்து வந்தார்.

அந்த அளவிற்கு இவர்களுடைய கம்போ மிகவும் அருமையாக இருந்தது என்றே சொல்லலாம். இதன் காரணாமாகவே தொடர்ச்சியாக இவர் எம்.ஜி.ஆர் படங்களில் நடித்தும் வந்தார். அந்த சமயம் இவர் நடித்த படங்களின் காமெடி காட்சிகளை வைத்தே படம் பெரிய அளவில் ஹிட் ஆனது என்று சொன்னால் கூட அதில் ஆச்சரிய படுவதற்கு ஒன்னும் இல்லை.

இந்த நிலையில் முன்னணி நடிகராக வளர்ந்த பிறகு நடிகர் சந்திரபாபு சென்னையில் பெரிய அளவில் செலவு செய்து வீடு ஒன்றை கட்டினாராம். அந்த வீடு கட்டிய பிறகு தான் நடிகர் சந்திரபாபுவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் அந்த சமயமே பெரிய அளவில் பேசப்பட்டதாம். அந்த வீடு மிகவும் வித்தியாசமாக இருக்குமாம்.

குறிப்பாக சந்திரபாபு கார் ஒன்றை வைத்திருந்தாராம். அந்த காருக்காகவே தன்னுடைய படுக்கை அறையில் கார் பார்க்கிங் வசதி செய்து வைத்திருந்தாராம். படப்பிடிப்பு முடிந்த பிறகு தன்னுடைய வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கவேண்டும் என்றாலும் கூட அவர் நேரடியாக காரை தன்னுடைய அறைக்கு கொண்டு சென்றுவிட்டாராம். அந்த அளவிற்கு ஆசையாக அவர் அந்த வீட்டை கட்டினாராம்.

ஆனால், இவர் இந்த வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவருடைய ராசி எல்லாம் போய்விட்டதாம். ஏனென்றால், இந்த வீட்டிற்கு சென்ற பிறகு ரொம்பவே  சந்திரபாபு  கஷ்ட்டப்பட்டாராம்.பட வாய்ப்புகள் இல்லாமல் மற்றும் அவரை பற்றி கிசு கிசு உள்ளிட்ட சில பிரச்சனைகளால் மிகவும் வேதனையில் இருந்தாராம். இந்த தகவலை சினிமா ஆய்வாளர் கந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்திரபாபு  அந்த ஆசைப்பட்டு கட்டிய வீட்டில் தான் காலமானராம். கடைசியாக இவர் 1972 -ஆம் ஆண்டு வெளியான நீதி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த சந்திரபாபு 1974-ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago