படுக்கை அறைக்குள் கார் பார்க்கிங் வசதி! சந்திரபாபு கட்டிய அந்த பிரமாண்ட வீடு?
காமெடி காதாபாத்திரங்களில் நடித்து 1060 காலகட்டத்தில் கலக்கியவர் என்றாலே நடிகர் சந்திரபாபுவை கூறலாம். தமிழ் சினிமாவில் தன அமராவதி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி வாழ பிறந்தவள், குலேபகவல், நல்ல தங்கல், பாண்டித்தேவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். அந்த சமயம் எல்லாம் எம்ஜி.ஆர் நடிக்கும் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சந்திரபாபு தான் நடித்து வந்தார்.
அந்த அளவிற்கு இவர்களுடைய கம்போ மிகவும் அருமையாக இருந்தது என்றே சொல்லலாம். இதன் காரணாமாகவே தொடர்ச்சியாக இவர் எம்.ஜி.ஆர் படங்களில் நடித்தும் வந்தார். அந்த சமயம் இவர் நடித்த படங்களின் காமெடி காட்சிகளை வைத்தே படம் பெரிய அளவில் ஹிட் ஆனது என்று சொன்னால் கூட அதில் ஆச்சரிய படுவதற்கு ஒன்னும் இல்லை.
இந்த நிலையில் முன்னணி நடிகராக வளர்ந்த பிறகு நடிகர் சந்திரபாபு சென்னையில் பெரிய அளவில் செலவு செய்து வீடு ஒன்றை கட்டினாராம். அந்த வீடு கட்டிய பிறகு தான் நடிகர் சந்திரபாபுவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் அந்த சமயமே பெரிய அளவில் பேசப்பட்டதாம். அந்த வீடு மிகவும் வித்தியாசமாக இருக்குமாம்.
குறிப்பாக சந்திரபாபு கார் ஒன்றை வைத்திருந்தாராம். அந்த காருக்காகவே தன்னுடைய படுக்கை அறையில் கார் பார்க்கிங் வசதி செய்து வைத்திருந்தாராம். படப்பிடிப்பு முடிந்த பிறகு தன்னுடைய வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கவேண்டும் என்றாலும் கூட அவர் நேரடியாக காரை தன்னுடைய அறைக்கு கொண்டு சென்றுவிட்டாராம். அந்த அளவிற்கு ஆசையாக அவர் அந்த வீட்டை கட்டினாராம்.
ஆனால், இவர் இந்த வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவருடைய ராசி எல்லாம் போய்விட்டதாம். ஏனென்றால், இந்த வீட்டிற்கு சென்ற பிறகு ரொம்பவே சந்திரபாபு கஷ்ட்டப்பட்டாராம்.பட வாய்ப்புகள் இல்லாமல் மற்றும் அவரை பற்றி கிசு கிசு உள்ளிட்ட சில பிரச்சனைகளால் மிகவும் வேதனையில் இருந்தாராம். இந்த தகவலை சினிமா ஆய்வாளர் கந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்திரபாபு அந்த ஆசைப்பட்டு கட்டிய வீட்டில் தான் காலமானராம். கடைசியாக இவர் 1972 -ஆம் ஆண்டு வெளியான நீதி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த சந்திரபாபு 1974-ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.