‘கேப்டனுக்கு விரலே கம்பி மாதிரி’ ..! வாகை சந்திரசேகர் கூறிய வியப்பூட்டும் சம்பவம் .!

Vijayakanth : கேப்டன் விஜயகாந்தை பற்றி அவருடன் அதிகமான படங்களில் ஒன்றாக நடித்த வாகை சந்திரசேகர் தற்போதைய பேட்டி ஒன்றில் வியப்பூட்டும் சம்பவம் பற்றி பேசி இருக்கிறார்.
விஜயகாந்த் போன்ற ஒரு மாமனிதர் இனி இந்த உலகில் பிறப்பாரா என்று நமக்கு தெரியாது. அதே போல அவர் உயிரோடு இருக்கும் போது அவர் செய்த பல உதவிகள் நமக்கு வியப்பூட்டும் வகையில் இருந்து வருகிறது. அதே நேரம் அவரது சில வியப்பூட்டும் கம்பீரமான சம்பவங்களை குறித்து பல பிரபலங்கள் பேட்டிகளில் கூறும் பல விஷயங்கள் நமக்கு மேலும் ஒரு புல்லரிப்பையே தருகிறது.
தற்போது, அவருடன் அதிகமான படங்களில் ஒன்றாக நடித்த வாகை சந்திரசேகர் அது போன்ற ஒரு சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அவர் பேசுகையில், “விஜயகாந்த்க்கு சொந்தமாகவே நிறையே அரிசி மில் இருக்கிறது. ஒரு முறை அவரது அரிசி மில்லில் நான் சென்ற போது அந்த அரிசி மில்லில் அரிசி மூட்டைகளை குத்தி பார்ப்பதற்கு வளைந்த கம்பி ஒன்று இருக்கும்.
அதை வைத்து தான் எல்லா அரிசி மில்களிலும் அரிசி மூட்டையை குத்தி பார்ப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அதை எல்லாம் எடுக்காமல் தனது ஆள் காட்டி விரலை வைத்தே அந்த அரிசி மூட்டைகளை குத்தி பார்த்து அது என்ன அரிசி என்று பார்ப்பார். அவருக்கு அவரது கை விரலே கம்பி போல அவ்வளவு வலிமையாக இருக்கும். கை விரல்கள் மட்டும் இல்லை அவரது ஒட்டு மொத்த உடலும் அவ்வளவு வலிமையாக இருக்கும்.
அவரது படங்களில் எந்த அளவுக்கு அவரது கால்களில் கம்பீரம் இருக்குமோ அதே அளவுக்கு வலிமை நிஜத்திலும் இருக்கும். எனக்கு தெரிந்த வரை எந்த ஒரு மனிதருக்கும் இந்த அளவிற்கு வலிமை இருந்தது இல்லை”, என்று விஜயகாந்த் அவர்களின் கம்பீரமான அந்த சம்பவத்தை பற்றி வாகை சந்திரசேகர் தற்போதய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025