Vijayakanth : முன்னாள் தேமுதிக தலைவரும், மறைந்த முன்னாள் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உயிரோடு இருக்கும் போது செய்த சிறப்புமிக்க காரியங்கள் எல்லாம் இப்போது மட்டும் அல்ல எப்போது நினைத்து பார்த்தாலும் நமக்கு அது புல்லரிக்கும். எந்த அளவுக்கு அவரது செயல்கள் எல்லாமே மென்மையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அவரது மேடைபேச்சும் கம்பீராமாக இருக்கும். இந்த பதிப்பில் அது போன்ற ஒரு கம்பீராமான பேச்சை பற்றி தான் பார்க்க போகிறோம்.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலாமச்சரான எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருத்த வாகனத்தில் மிகவும் பிரளமான ஒரு வாகனம் என்றால் அது அவர் அரசியல் பிரச்சாரத்திற்கு எடுத்தும் செல்லும் வாகனம் ஆகும். அந்த வாகனம் எம்.ஜி.ஆருக்கெனவே பிரத்யேகமாக வடிவமைக்க பட்டதாகும். அவருக்கென ஏசியும் (AC), படுக்கை வசதிகளும் அதில் உண்டு. மேலும், அந்த வாகனத்தின் மேல் நடுவில் ஒரு துவாரம் இருக்கும் அதில் நின்று தான் எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்வார். அந்த வாகனத்தின் நம்பர் 2005 ஆகும்.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்தவர் தான் நம் விஜயகாந்த். அப்போது இருந்தே அந்த வாகனத்தின் மீது விஜய்காந்த் அவர்களுக்கு ஒரு இணை பிரியாத காதல் இருந்து வந்தது. 1996 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியான ஜானகி அம்மையாருடன் இருந்த நட்பை கொண்டு அந்த வாகனத்தை கேட்டார். அவர் வாகனத்தை கேட்ட போது அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
அந்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டியும் எம்.ஜி.ஆர் மனைவியான ஜானகி அம்மையார் சந்தோசமாக அந்த வாகனத்தை விஜயகாந்திடம் பரிசாக ஒப்படைத்தார். அந்த வாகனத்தை பெற்ற விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் அதனை நிப்பாட்டி வைத்தார். அதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டு விஜயகாந்த் அவர்கள் தேமுதிக கட்சியை தொடங்கினார். அந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் அந்த வாகனத்தில் கெத்தாக வந்து இறங்கினார்.
அந்த வாகனத்தில் வந்தது மட்டும் இல்லாமல் தந்து முதல் கட்சி மாநாட்டில் அந்த வாகனத்தை பற்றி உணர்ச்சி வசமாகவும் பேசினார். அந்த வாகனத்தை பற்றி அவர் பேசும் போது, ” 1994-ம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரோட பிரச்சார வாகனம் என் கைக்கு கெடச்சுது அதை மட்டும் மறந்துராதீங்க. யார் யாரோ எப்படி எப்படியோ இருந்த போது எல்லாம் யாருக்கும் கிடைக்கவில்லை.
ஆனால் மதிற்பிற்குரிய ஜானகி அம்மையார் எனக்கு குடுத்தாங்க. ஆனால் அந்த வாகனத்தை நான் எடுக்கவில்லை அதை எப்போது எடுத்திருக்கேனு எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க 2005-ல எடுத்துருக்கேன். அந்த வாகனத்தின் நம்பர் 2005, 2005-ல எம்.ஜி.ஆர் வாகனம் விஜயகாந்திடம் போக வேண்டும். அந்த வண்டியில் தான் விஜயகாந்த் பிரச்சாரம் போக வேண்டும் என நெத்தியில் எழுந்திருக்கிறது.”, என்று உணர்ச்சிவசமாக மேடை பிரச்சாரத்தில் பேசினார்.
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…
சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல்,…
விழுப்புரம் : பெஞ்சள் புயல், வெள்ளம் காரணமாக முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…